Asianet News TamilAsianet News Tamil

ப்பா என்ன ஸ்பீடு... ஏர்போர்டில் சிங்கநடை போட்டு நடந்து வந்த சூப்பர்ஸ்டார் - ரஜினியின் செம்ம மாஸ் வீடியோ இதோ

தலைவர் 170 படத்திற்காக திருவனந்தபுரம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஏர்போர்டில் செம்ம மாஸாக நடந்துவந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Rajinikanth landed in Trivandrum for Thalaivar 170 movie shoot airport video viral gan
Author
First Published Oct 3, 2023, 4:04 PM IST

ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 170. த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினி உடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதுதவிர பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரும் இப்படத்தில் வில்லனாக மிரட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் இந்தி நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளாராம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஜெய் பீம் போல் உண்மை கதையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுக்க உள்ளாராம் த.செ.ஞானவேல். தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புக்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய ரஜினிகாந்த், இப்படம் நல்ல ஒரு கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று கூறினார்.

இப்படத்தின் ஷூட்டிங் இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்க உள்ளது. இதற்காக காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்த ரஜினிகாந்த். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிங்கநடை போட்டு நடந்து வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் 72 வயதிலும் என்ன ஸ்பீடா நடக்குறாரு என வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்...பாகுபலியவே புரட்டி எடுத்த வில்லனை ஒரு கை பார்க்க ரெடியான ரஜினி... தலைவர் 170 படத்தில் இணைந்த மாஸ் நடிகர்

Follow Us:
Download App:
  • android
  • ios