மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திரையிடப்பட்ட ஜெயிலர் படம்.. திடீரென தியேட்டருக்குள் சிங்கநடை போட்டு வந்த ரஜினி
ஜெயிலர் திரைப்படத்தின் 50-வது நாளை கொண்டாடும் விதமாக தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திரையிட்டனர்.
தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தின் 50-வது நாளை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுமார் 170-டிக்கெட்கள் புக் செய்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயிலர் திரைப்படத்தினை காணசெய்தனர். திரைப்படத்தினை திரையிடுருவதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் கெட்டப்பில் வந்த ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த்-போல் செய்கைகள் செய்து திரையரங்கில் இருந்த மாற்றுத்திறனாளிகளை சந்தோஷபடுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீ பாலகிருஸ்ணா திரையரங்கில் ஓடி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் படத்தின் 50-வது நாளை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் சார்பில் சுமார் 170-டிக்கெட்கள் புக் செய்து அதனை மாற்றுதிறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்டுகளிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்து அவர்களை ஸ்ரீ பாலகிருஸ்ணா திரையரங்கம் அழைத்து வந்து ஜெயிலர் திரைப்படத்தினை காண செய்தனர்.
இதையும் படியுங்கள்... கைதி 2-வை கிடப்பில் போட்ட லோகேஷ்.. கால்ஷீட்டோடு காத்திருந்த கார்த்தியை கழுகுபோல் தூக்கிச்சென்ற பிரபல இயக்குனர்
இந்த திரைப்படத்தினை காண வந்த அனைத்து மாற்று திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்ரீ பாலகிருஸ்ணா திரையரங்கம் சார்பில் ஸ்னாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது. திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு திடீரென ஜெயிலர் படத்தில் வரும் ரஜினிகாந்த் போல் கெட்டப்பில் திரையரங்கிற்குள் வந்த ரஜினி ரசிகர் ஒருவர் அங்கிருந்த மாற்றுதிறனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் போல் செய்கை செய்து ரஜினிகாந்த் போல் அங்கும் இங்கும் நடந்து சென்று திரையரங்குகளில் இருந்த மாற்றுதிறனாளிகளை சந்தோஷபடுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் போல் இருந்த அந்த ரசிகருக்கு மாற்றுதிறனாளிகள் கைகள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் இதனை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் மாற்றுதிறனாளிகளுக்கு திரையிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... ரஜினி படத்தில் சர்ச்சைக்குப் பின்னர் இணைக்கப்பட்ட அந்தப் பாடல்; நினைவு கூறும் பாடலாசிரியர் வைரமுத்து!!