Rajinikanth is my inspiration says rahman

ரஜினிகாந்த் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சினிமா உலகில் 25 வருடங்களாக சாதனைப் படைத்து வரும் ஆஸ்கார் மன்னன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் எந்த ஊரில் இசை நிகழ்ச்சி நடத்தினாலும், அந்த ஊரில் அவரது ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

25 வருடங்களாக இசை உலகில் நிலைத்து நிற்கும் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ரஜினி நடிப்பில் வந்த முத்து, சிவாஜி, படையப்பா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்போது, அது நடிப்புக் கலையிலும் பிரதிபலிக்கும். அந்த வகையில், ரஜினிதான் தனக்கு இன்ஸ்பிரேஷன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பல ஹீரோக்களுக்கு இசையமைத்திருக்கும் ரகுமான் தான் 2.0 படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.