சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில், துக்ளக் விழாவில் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதமாக பேசினார் என மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது.

இதற்கு பெரியாரிஸ்ட்டை சேர்ந்த பலர், எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தான் பேசியதில் எந்த பொய்யும் இல்லை என்பதில் உறுதியாக இருந்த சூப்பர் ஸ்டார். மேலும் மன்னிப்பு கேட்க முடியாது என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

மேலும் இவர் மீது தொடரப்பட்ட இரு வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் லாரன்ஸ் போட்ட ட்விட்டரில், பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன்  திரைப்படத்தை வெளியிட சிரமப்பட்ட போது ரஜினிகாந்த் தான் பணம் கொடுத்து உதவியதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது பலரது கேள்வியாக இருந்த நிலையில்,ரஜினிகாந்த் தனக்கு உதவியது உண்மை தான் என விளக்கம் அளித்துள்ளார் வேலு பிரபாகரன். இதுகுறித்து அவர் கூறுகையில்.... தான் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல்  தவித்தபோது, நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் என்றும், பெரியார் ஆதரவாளர்களே உதவாத போது ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ரஜினிகாந்த் இதனை செய்தது தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.