Rajinikanth: ஏர்போர்ட்டில் மனைவிக்காக ரஜினியிடம் கோரிக்கை வைத்த ரசிகர்! இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம், ரசிகர் ஒருவர் அவரின் மனைவிக்காக கோரிக்கை ஒன்றை வைக்க, அதனை நிறைவேற்றும் விதமாக ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றார்.

'ஜெயிலர்' படத்தின் ஹிஸ்டாரிக் வெற்றியை தொடர்ந்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 'ஜெய் பீம்' படத்தை தொடர்ந்து, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையில் சூப்பர் ஸ்டாரை வைத்து இவர் இயக்கி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம், 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்கியது. இதில் நடிகை மஞ்சு வாரியர், விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தலைவர் ரெட்ரோ லுக்கில் தோன்றி ரசிகர்களை உச்சாகப்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு, திருச்சி, திருநெல்வேலி போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டது.
கடந்த ஒரு வரமாக, மும்பையில் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில், இதில் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டு நடித்தார். இன்று படக்குழு ரஜினி மற்றும் அமிதாப் இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் எடுக்கப்பட்டு வந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சென்னை விமான நிலையத்தில், ரஜினிகாந்தை பார்த்து உச்சாகமான ரசிகர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு உங்களை சந்திக்க வேண்டும் என கூறினார், என தன்னுடைய மனைவியின் ஆசையை கூற... ரஜினிகாந்த் மிகவும் கூலாக அழைத்து வாருங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.