இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் பேட்ட படம் கடந்த ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும்  வெளியானது. உலகம் முழுவதுமே படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் மரண அடி வாங்கியுள்ளது. 

பேட்ட படம் தெலுங்கு தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நல்ல வசூல்  அள்ளியுள்ளது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரிய அளவில் தியேட்டர் கிடைக்காததால் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள், எங்க தலைவரை தேவையில்லாமல் ஜுனியர் நடிகரான அஜித்துடன் மோதவிட்டு அசிங்கப்படுத்தினீர்கள், அதேபோல தெலுங்கில் மாஸ் ஹீரோக்கள் பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' போன்ற வர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பேட்டயை ரிலீஸ் பண்ணி இப்படி தெலுங்கு மார்க்கெட்டையும் படுகுழியில் தள்ளிட்டு வேடிக்கை பார்க்கிறீங்க, மொத்த அவமானத்தையும் எங்கள் தலைவர்க்கு தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

உஷாரான விஸ்வாசம் தங்களது ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டது. ஆனால்  பேட்ட டீம் வீம்புக்கென்றே  ரிலீஸ் பண்ணது. அதேநாளில்  3 நேரடி படங்கள் ரிலீஸ் ஆனதால் தியேட்டர் கிடைப்பதில் கடும் சிக்கல்  வரும் படத்தை பிறகு ரிலீஸ் செய்யுங்கள் என விநியோகிஸ்தர்கள்  சொல்லியும் செய்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளதாம்.

ரஜினிகாந்த் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள் ஆந்திராவில் தமிழகத்துக்கு இணையாக வசூல் குவிப்பது கடந்த பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான '2.0' படம் தமிழகத்தை காட்டிலும் தெலுங்கில் தான் அதிக வசூலைப் பெற்றது. பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தை ஆந்திராவில் திரையிட்டு அதிக வசூலைப் பெறலாம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பேட்ட டீம் கனவை களைத்து திருப்பி அனுப்பியது  தெலுங்கு மாஸ் ஹீரோக்கள் படம்.