சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மீதான சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். 

சூப்பர் ஸ்டாரின் சொந்த திருமண மண்டபமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, சென்னை மாநகராட்சி சார்பில்  ரூபாய் 6.50 லட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தான் தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் மத்திய மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்தது. இதனால் மண்டபத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லை. எனவே சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தனக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த வாரியான 6.50 லட்சம் வரியை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.