ஷங்கர் இயக்கத்தில் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ 14 மொழிகளில் வெளியாகும் இப்படம், வெற்றியடைய வேண்டி ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு விரதம் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே சுமார் 10000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீசாகும் ‘2.0’ வெற்றியடைய வேண்டி, மதுரையில் உள்ள கோவில்களில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தி, விரதம் இருந்து வழிபாடு செய்துள்ளனர். அதேபோல, அங்கபிரதட்சணம், மண் சோறு சாப்பிடுவது போன்ற கடினமான வேண்டுதல்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

ரஜினியின் இந்த பிரமாண்ட படத்திற்குப் பின், அரசியலில் ஈடுபட்டு தமிழக முதல்வராக வேண்டும். அதில் அவருக்கு எந்த சிக்கலும் வரக் கூடாது. அவர் உடல்நலத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்பதனால் பிரார்த்தனை செய்கிறோம். மேலும் 2.0 ரிலீசுக்கு பின் சூப்பர் ஸ்டாரை யாராலும் அசைக்க முடியாது என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.