இன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகியுள்ள ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா, வீரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர்ஸ்டாருடன் நான்காவது முறையாக இணைந்த படம் தான் பாபா. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமின்றி, இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தனது லோட்டஸ் இண்டர்நேஷனல் கம்பெனி மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் கவுண்டமனி, விஜயகுமார், ஷாயாஜி ஷிண்டே, ரீனா பரத்வாஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையும் படியுங்கள்... 2022 Top 5 songs: 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள்..!

Scroll to load tweet…

இருப்பினும் ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபா இருந்து வந்தது. இதன் காரணமாக இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மெருகேற்றி, சில மாற்றங்களை செய்து மீண்டு ரீ-ரிலீஸ் செய்து உள்ளனர். இன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது.

Scroll to load tweet…

மாண்டஸ் புயல் அச்சுறுத்தல் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாத ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலேயே தியேட்டர் முன் கூடி பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்க ஆடிப்பாடியும் இப்படத்தை கொண்டாடினர். ஏற்கனவே ரிலீசான படமாக இருந்தாலும் புது படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அந்த அளவுக்கு பாபா படத்தின் ரீ-ரிலீசுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் தியேட்டரில் ஆடிப்பாடி கொண்டாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகின்றன.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இதையும் படியுங்கள்...கே.ஜி.எஃப் தந்த மவுசு... தனுஷுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன படக்குழு