Asianet News TamilAsianet News Tamil

ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக வந்த ஹுகூம் பாடல்... ரிபீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்

ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளாக அனிருத் இசையில் வெளியான ஹுகூம் பாடலை ரஜினி ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.

Rajinikanth fans happy with jailer movie HUKUM song
Author
First Published Jul 18, 2023, 11:05 AM IST | Last Updated Jul 18, 2023, 11:09 AM IST

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைகாண உள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளதால், அப்படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஹுகூம் என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அனிருத் பாடியுள்ள இந்த பாடலின் வரிகளை சூப்பர் சுப்பு எழுதி உள்ளார்.

டேய்... இங்க நான் தான் கிங் என நடிகர் ரஜினிகாந்த் பேசும் மாஸ் ஆன வசனத்தோடு தொடங்கும் இந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இப்பாடல் வரிகள், கேட்டாலே புல்லரிக்க வைக்கும் வரிகளுடன் கூடிய இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே ஹுகூம் பாடலின் லிரிக்கல் வீடியோ 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்று யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பெயர தூக்க நாலு பேரு... பட்டத்த பறிக்க நூறு பேரு! சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஜெயிலர் ரஜினி கொடுத்த தரமான பதிலடி

Rajinikanth fans happy with jailer movie HUKUM song

குறிப்பாக ”தொட நெருங்குற முடியாதே
எது இழுக்குது தெரியாதே
குள்ள நரிக்கிது புரியாதே
விதிகல திருப்புற
தலைவரு அலப்பறை

உன் அலும்ப பாத்தவன்
உங்கப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசுர கொடுக்க கோடி பேரு

அலப்பற கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
” என்கிற வரிகளை கேட்டாலே புல்லரிப்பதாக ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத், அஜித்துக்கு ‘தலை விடுதலை’, விஜய்க்கு ‘பீஸ்ட் மோடு’, கமலுக்கு ‘நாயகன் மீண்டும் வரார்’ ஆகிய கூஸ்பம்ஸ் பாடல்களை கொடுத்தது போல் தற்போது ரஜினிக்காக இந்த ஹுகூம் பாடலை கொடுத்துள்ளதாகவும், இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இருப்பதாகவும் அனிருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்...  கத்தி.. துப்பாக்கி.. புல்லட்டு எல்லாம் பறக்குது! மாஸாக வெளியாகி மெர்சல் செய்த 'ஹுக்கும்' லிரிகள் பாடல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios