2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. போருக்கு தயாராகுங்கள் என்றும், சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் கொந்தளித்தார். எனவே நிச்சயம் 2021 தேர்தலுக்குள் அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களிடையே அரசியல் புரட்சி வெடிக்கட்டும். பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி கொஞ்சம் ஆட்டம் காட்டினார். இதனால் அவர் அரசியல் கட்சி தொடங்குவது மீண்டும் கேள்விக்குறியானது.

இதனிடையே, கொரோனா வந்துவிட்டதால், ரஜினி அரசியல் வருகை பெரும் சந்தேகத்துக்கு ஆட்படுத்தியது. ஆனாலும், ரஜினி நவம்பரில் அரசியல் கட்சி தொடங்குவார். மதுரையில் மாநாடு நடத்த உள்ளார் என்று யூகங்கள் கிளம்பின. ஆனால், ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவலை ஒரு சிலர் பரப்புவதாகவும், இதனால் கோபமடைந்த ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் ரஜினி கட்சி தொடங்குவதில் உறுதியாக இருப்பதாவும், மன்றங்களை வலுப்படுத்த நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கு கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இந்த தகவல் வெளியான உடன், ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவரது மன்ற நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதாவது, மாற்றத்தை சிந்திக்கும் மக்களும்.. மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால், அரசியல் மாற்றம்..!! ஆட்சி மாற்றம் எப்பவுமே இல்ல” என்ற வாசகங்கள் பெரும்பாலும் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றன. இந்த சூழலில், தலைமையில் இருந்து உத்தரவு வரும், இதுபோன்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி, உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை யாரும் தன்னிச்சையாக போஸ்டர் ஒட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

தலைவர் சொன்னால் மதித்து கேட்பது தான் மற்ற கட்சிகளில் பழக்கம். ஆனால் தலைவனோட தனி வழியை அப்படியே பாலோப் பண்ணுவோம் என சொல்லும் ரசிகர்கள் ரஜினி போட்ட கட்டளையை மதிக்கிற மாதிரி தெரியல. தலைமையிடம் உத்தரவு வாங்காமல் போஸ்டர் ஓட்டக்கூடாது என அறிவிப்பு வந்த பிறகுதான் அதிக அளவில் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்துள்ளனர். இன்று அண்ணாவின் 112வது பிறந்தநாளை திமுகவும், அதிமுகவும் போட்டி கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அண்ணாவின் வழியில் வந்த திராவிட கட்சிகளை கிண்டலடிக்கும் விதமாகவும், ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அரைக்கூவல் விடுத்தும் இன்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  அதில், இதுவரை நடந்த அண்ணாவின்... வழிதோன்றல்களில் திராவிட ஆட்சி... 2021-ல் அண்ணாத்த-யின் ஆன்மீக அரசியலின் நல்லாட்சி என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.