சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'பேட்ட' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு,  தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 167  ஆவது படமான தர்பாரில் நடிக்க உள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'பேட்ட' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு, தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 167 ஆவது படமான தர்பாரில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. ரஜினிகாந்த் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு, 'பேட்ட' படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை, மிகவும் கோலாகலமாக மும்பையில் இன்று போடப்பட்டது. இதில் படக்குழுவை சேர்ந்து முக்கியமான நபர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அண்மையில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பெயர் 'தர்பார்' ஆகியவை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.