தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய உடல் நலம் குறித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: கவர்ச்சி உடையில் அஜித்துடன் அட்டகாசம் செய்த கிரண்..! இதுவரை பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு..!
 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஓய்வில் இருந்தார். கட்சி பணிகள் போன்றவற்றை, அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் நிர்வகித்து வருகிறார். மேலும் விஜயகாந்தின் மகன், விஜய் பிரபாகரனும் அரசியல் நோக்கத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்படவே, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளது என்றும்  தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சன் டிவி சீரியல் நடிகை..! தனிமை படுத்தப்பட்டதாக வெளியான தகவல்!
 

இதை தொடர்ந்து, விஜயகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்பட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்தின் உடல் நிலை குறித்து போன் செய்து விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், ரஜினிகாந்த், விஜயகாந்தின் மைத்துனர் சுதீசுக்கு போன் செய்து விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததாகவும்,  அதற்கு சுதீஷ் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.