ரஜினி குடும்பத்தின் அந்த விவகாரமானது, ஊரறிஞ்ச ரகசியம்தான்! அதாவது சிவாஜிராவ் கெய்க்வாட்! என்பதே ரஜினியின் ஒரிஜினல் பெயர். அவரது துவக்க கால வாழ்க்கை வெகு சாதாரணமானது மற்றும் ஏழ்மை நிறைந்தது. சிவாஜிராவ் கெய்க்வாட் என்பதே அவரது ஒரிஜினல் பெயர். பிற்காலத்தில் ரஜினிகாந்த் இவ்வளவு பெரிய நடிகராவார், கோடி கோடியாய் சம்பாதித்துக் கொட்டுவார், நாட்டின் பிரதமர் கூட அவரை கவனித்து அரசியல் காய்களை நகர்த்துவார்! என்று அக்குடும்பம் அன்று நினைத்திருக்கவில்லை. ஆனால் அதெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினியின் இவ்வளவு பெரிய செல்வாக்கையும், வசதிகளையும் அவரது சொந்த குடும்பம் முழுமையாக அனுபவிக்கிறதா? என்றால் அது மிகப்பெரிய டவுட்தான். கல்லூரி மாணவியான லதா, ரஜினிகாந்தை பேட்டி எடுக்க சென்று பின் அது காதலாகி, கல்யாணத்தில் முடிந்தது. லதா வந்த பின் ரஜினிக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுந்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள். அது உண்மையும் கூட! என்பார்கள் ரஜினியின் கர்நாடகா நண்பர்கள். 

ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் ரஜினியை தன் அன்புப் பிடியில்தான் வைத்திருக்கிறார் லதா. இன்று வரை அது தொடர்கிறது. ஆனாலும் லதாவின் இரும்புக் கோட்டையை தாண்டி வந்து ரஜினியை நெருங்கி நிற்பதும், ரஜினிக்காக யாகங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது, ரஜினி செல்வாக்கின் மூலம் கிடைக்கும் புகழை அனுபவிப்பது, ரஜினியின் வெறி ரசிகர்களால்  புகழ்ந்து குளிர்விக்கப்படுவது  உள்ளிட்டவற்றை நிகழ்த்துவது ரஜினியின் அண்ணனான சத்யநாராயணராவ் கெய்க்வாட் தான். ’நானும் அவனும் ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகள், என் தம்பி அவன், அதன் பிறகே உங்கள் ரஜினிகாந்த்’ என்று ரஜினி மீது முழு உரிமையை காட்டி வருபவர் அவர்.  ரஜினியின் ஆன்மிக பயணம் முதல் அரசியல் வரை எல்லா விஷயங்களைப் பற்றியும் அடிக்கடி வெளிப்படையாக பேட்டி தட்டும் மனிதர். லதாவே பல முறை ‘கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க வெளிப்படையாக பேசப்போக, அவருக்கு சிக்கலாகுது.’ என்று சொல்லியும் கூட, தன் தம்பி மீதான தனது உரிமையை விட்டுக் கொடுக்காதவர் அவர். 

சும்மாவே பட்டைய கெளப்பும் சத்ய்நாராயணாராவ், ரஜினியின் 70 வது பிறந்தநாள் நெருங்கி வருகிறதென்றால் சும்மா இருப்பாரா? ரஜினி ரசிகர்களால் ஆங்காங்கே நடத்தப்படும் நலத்திட்ட்ட உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். அப்படித்தான் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டவர் “தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார். மக்களின் பலம், ஆசீர்வாதம் அவருக்கு உள்ளது. ரஜினி போல் ஒருவர் பிறக்க மாட்டார் என மக்கள் நினைக்கின்றனர். தமிழக மக்களுக்கு தந்தை, தாத்தா, சகோதரராக அவர் உள்ளார்.” என்று ஒரு பஞ்ச் வைத்தார். இதுதான் லதாவை செம்ம கடுப்பாக்கிவிட்டது.இந்த வயதிலும் ஸ்டைலும், அழகும் குறையாம, ‘இளமை திரும்புதே! புரியாத புதிராச்சே!’ன்னு பாடிட்டு இருக்கிற மனுஷனை பார்த்து ‘தமிழக மக்களுக்கு தாத்தாவாக இருக்கிறார்-ன்னு அந்த மனுஷன் எப்படி சொல்லலாம்? அவருக்கு வயசாகிடுச்சுன்னா வீட்டோட இருக்க வேண்டிதானே? சும்மாவே மீடியாவும், பத்திரிக்கைகளும் இவரை  உரசி எழுதுவாங்க. இதுல சொந்த அண்ணனே இப்படி தாத்தான்னு சொல்லலாமா? இதுக்குதான் அவரை எப்பவுமே வாய் திறக்காம இருக்க சொல்லுங்கன்னு இவர் கிட்ட சொல்லுவேன். இப்ப பேரை கெடுத்துட்டாரே!” என்று பொங்கிவிட்டார். ஆதங்கப்பட்ட லதா, அதை அப்படியே ரஜினியிடமும் கொட்டிக் கொதித்திருக்கிறார். 
தன் அண்ணன் தன்னை தாத்தாவாகவும் இருக்கிறார்! என்று சொன்னதில் ரஜினிக்கு எந்த வருத்தமும் இல்லை. 70 வயதாகி, எப்பவோ மூன்று பேரன்களை பெற்றுவிட்ட மனிதர் தாத்தா தானே?! என்பது அவர் எண்ணம். ஆனாலும் மனைவி கண்ணீர் விடும் அளவுக்கு அண்ணன் பேசுவதை அவரால் சகிக்க முடியவில்லை. அதேவேளையில் விவரம் புரியாத வயதிலிருந்து தன்னை தாங்கி வரும் அண்ணனை விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. 
தவிக்கிறார் ரஜினி! பாவம்.