சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படம் கடந்த பொங்கல் திருவிழாவின் போது வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலில் முழு கவனம் செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறினார்.   'தலைவர் 166' அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை கொண்ட படமாக இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.