சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'தர்பார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, மற்றும் வெளிநாடுகளில் மும்புரமாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தான் முடிவடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பு, ஒவ்வொரு படம் முடிந்த பின்பும் வழக்கமாக ரஜினி மேற்கொண்டு வரும் ஆன்மீக யாத்திரைக்காக இமையமலை சென்றார். அவருடன், மகள் ஐஸ்வர்யாவும் சென்றிருந்தார். 

சூப்பர் ஸ்டார் ஆன்மீக யாத்திரையின் போது அவர் தன்னுடைய நண்பருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் பரவியது.

இந்நிலையில்... இமைய மலையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த் விமான நிலையத்திலிருந்து கார் மூலம், வருவதை அறிந்த அவருடைய ரசிகர் ஒருவர், ரஜினிகாந்த் சென்ற காரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.

ரஜினிகாந்த் வீடு வரை வந்த அந்த வாலிபரின் செயலால் பதறி போன சூப்பர் ஸ்டார், தன் வீட்டு வாட்ச்மேனிடம் கூறி அந்த வாலிபரை வீட்டிற்குள் வரவழைத்து, இப்படி ஆபத்தான முறையில் பைக் ஓட்டாதீர்கள் என்று அறிவுரை கூறி அந்த வாலிபருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.