சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'பேட்ட' படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. நடிகை நயன்தாராவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் உள்ளார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாடாளு மன்ற தேர்தலை ஒட்டி, வாக்களிப்பதற்காக, மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார்.

தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது.  

நேற்று வாக்களித்ததற்கு பின், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்ற கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்துள்ளார். "தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.  நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பும் ரசிகர்களின் ஆர்வம் தனக்குப் புரிகிறது. அவர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி இம்முறை ஆட்சியை பிடிப்பாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதற்கு மே 23 ஆம் தேதி பதில் தெரிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.