சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

நடிகை நயன்தாரா, சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்கு பின் போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டும் சூப்பர் ஸ்டாரை வரும் ஜனவரி 9 ஆம் தேதி, திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கிறார்கள்.

இந்த படத்தை முடித்த கையோடு, தலைவர் அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார். 168 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை பற்றிய அதிகார பூர்வ தகவல் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படத்தை தல அஜித்தை தொடர்ந்து நான்கு முறை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மூன்று நடிகைகள் நடிக்க உள்ளனர். ஏற்கனவே மீனா தன்னுடைய கதாப்பாத்திரம் இந்த படத்தில் மிகவும் ஜாலியானதாக இருக்கும் என கூறி இருந்தார். இதை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், தலைவரின் தங்கை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதே போல் குஷ்புவின் கதாப்பாத்திரம் பற்றிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. குஷ்பு, வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வெளியாகியுள்ள தகவல் எந்த அளவிற்கு நம்பத்தகுந்தது என்பதை படகுழுந்தான் சொல்ல வேண்டும்.