ஃபீல்டுக்குள் வந்தபோது செமத்தியாய் கல்லா கட்டிய தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் செம்ம நஷ்டத்தில் கிடக்கிறது. குறிப்பாக ‘காலா’ பட தயாரிப்பிற்கு பிறகுதான் மாஸ் அடி வாங்கியிருக்கிறது மருமகனின் கம்பெனி. இப்படி கம்பெனி கால் ஒடிந்து படுத்துவிட்டதை மாமனாரிடம் தனுஷ் சொல்லலை. ஆனால்  ரஜினி கண்டுபிடித்துவிட்டார். 

அதனால் மருமகனுக்கு கை கொடுக்க, புது ப்ராஜெக்ட் ஒன்றில், தனுஷ் நிறுவன தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இது ஆஸம் தகவல்தான். ஆனால் இந்த ப்ராஜெக்டில் இன்னும் சில எக்ஸ்ட்ரா ஆஸம் தகவல்கள் உள்ளன. அவை.... மிக நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினி - தனுஷ் காம்பினேஷன் இதில்  மெய்ப்படுகிறது. யெஸ், தயாரிப்பாளர் தனுஷும் இந்தப் படத்தில் ரஜினியோடு இணைகிறாராம். இதுமட்டுமல்ல, ரஜினியின் இரண்டாவது மருமகனான, செளந்தர்யாவின் கணவர் விசாகனும் இந்தப் படத்தில் இணைகிறார். விசாகன் இதற்கு முன் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார், அடிப்படையில் நடிப்பு வெறியுடைய விசாகனுக்கு இந்தப் படத்தின் மூலம் செம்ம எண்ட்ரி கொடுக்க ரஜினியும், தனுஷும் முடிவெடுத்துள்ளன்ராம். எல்லாம் ‘நம்ம வீட்டு பையன்’ எனும் அன்புதான். 

படத்தை இயக்கப்போவது?........’பேட்ட’ கார்த்திக் சுப்புராஜ்தான் என்கிறது கோடம்பாக்க கிளி ஒன்று. பேட்ட படம் மேக்கிங் ரீதியில் கபாலி, காலா போல் வித்தியாசமானதில்லை. ஆனால் அந்த இரண்டு படங்களுமே வர்த்தக ரீதியில் கையை சுட்ட நிலையில், பேட்டயோ வசூலை அள்ளிக் குவித்திருக்கிறது. ஆக்சுவலாக கார்த்திக் சுப்புராஜுக்கும் இந்த ‘மாஸ் மசாலா’ ஜானரில் விருப்பமில்லை. ஆனால் பேட்ட தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கேட்டதால் அப்படியொன்றை கொடுத்து சக்ஸஸ் செய்தார். 

நொடிந்து கிடக்கும் தயாரிப்பாளர் தனுஷும் இதைத்தான் கேட்கிறார். ஆக சூப்பர் மாஸ் ஸ்டார் மாமனார், செம்ம ஆக்டர் தனுஷ், புதுமுகம் விசாகனை வைத்து செம்ம ஸ்கிரீன் பிளே ஒன்றை செதுக்கிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இப்போது முருகதாஸின் ‘தர்பார்’ ஷூட்டிங்கில் பிஸியாய் இருக்கிறார் ரஜினி. இந்தப் படம் நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் போல் உள்ளது. எனவே கடந்த சில வருடங்களாக தான் வைத்திருக்கும் கொள்கையான ‘ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே’ என்பதை தளர்த்திவிட்டு, தர்பார் ஷூட்டிங்கோடு சேர்த்து சைமல்டேனியஸாக இந்தப் படத்திலும் ரஜினி கமிட் ஆகலாம்! சுப்புராஜ் மளமளவென ஷூட் செய்து முடிப்பார் என்பதால் ரஜினிக்கு இது டபுள் ஓ.கே.! என்கிறார்கள். 

ஒரே குடும்பத்தை  சேர்ந்த ரஜினி, தனுஷ், விசாகனை நடிக்க வைக்கும் கார்த்திக் சுப்புராஜ், பேசமா அவங்களோட ரியல் ஜோடிகளான லதா, ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யாவையே ரீல் ஜோடியாகவும் ஆக்கிடுங்களேன்! படம் கைகொடுக்காட்டாலும், இந்த செம்ம வித்தியாச காம்போவுக்காகவே கூட்டம் கட்டி ஏறும், நஷ்ட தனுஷும் சக்ஸஸ் தயாரிப்பாளர் ஆவார்.