நெட்டிசன்களின் பலத்த கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதைத் தொடர்ந்து, வெள்ள நிவாரண உணவுப்பொட்டலங்களில் தன் படங்களைப் பொறித்தவர்களை மன்றத்திலிருந்து ரஜினி டிஸ்மிஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 தானும் அரசியலில் குதித்துவிட்டதால், வழக்கத்திற்கு மாறாக வெள்ள நிவாரணப்பணிகளில் தீவிரமாக ஈடுபடும்படி தனது ரசிகர்களை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது தொடர்பாக ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நிவாரணப்பணியின் முதல் நாளன்று ரஜினி ரசிகர்களால் வழங்கப்பட்ட உணவுப்பொட்டலங்கள் அத்தனையிலும் ரஜினி படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்தும் நேற்று வரை ரஜினியின் படங்கள் உணவுப்பொட்டலங்களில் இடம் பெற்று வருகின்றன.

இதை நிர்வாகிகள் மூலம் ரஜினி மறைமுகமாகக் கண்டித்தும் ரஜினி ரசிகர்கள் அடங்குவதாயில்லை. இதனால் கடுப்பான ரஜினி சென்னையிலிருந்து சில நிர்வாகிகளை வெள்ள நிவாரணப்பகுதிகளுக்கு அனுப்பி, தன் சொல்லையும் மீறி ஸ்டிக்கர் ஒட்டுபவர்களின் பட்டியலை சேகரிக்கச் சொல்லியிருக்கிறார். அந்தப் பட்டியலில் இடம்பெறும் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்படுவது உறுதி என்கிறது ரஜினி வட்டாரம்.