இந்நிலையில் சூர்யாவின் இயக்குநர் சிவா ரஜினியை அவர் இல்லத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்தது பெரும் கேள்விக்குறியாகியிருந்தது. ரஜினி-சிவாவின் சந்திப்பில் அவரிடம் ரஜினி தனது அடுத்த படத்துக்கான கதை கேட்டிருப்பதாகவும் ‘பேட்ட’ படத்தோடு ரிலீஸாகி அதகளம் செய்த ‘விஸ்வாசம்’ டைரக்டரை வைத்தே அஜீத்தை விட தான் எவ்வளவு பெரிய வசூல் மன்னன் என்று காட்டவேண்டும் என்று ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் சில யூகங்கள் நிலவிவந்தன.

ரஜினியின் அடுத்த படம் குறித்த குழப்பமான செய்திகளுக்கு ஒரு தெளிவான விடை கிடைத்துள்ளது. ‘தர்பார்’படத்துக்குப் பின் தன் பட இயக்குநர் யார் என்பதை ரஜினி 100% முடிவு செய்துவிட்டார் என்பதை சற்று முன்னர் அவர் ‘விஸ்வாசம்’பட இயக்குநர் சிவாவை சந்தித்ததன் மூலம் உறுதியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

‘தர்பார்’படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்குக் கிளம்பும் முன்னர் மோடியின் பதவியேற்புக்குச் செல்லவேண்டிய பரபரப்பான சூழ்நிலையிலும் ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிவாவை தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசியது அப்போது கோடம்பாக்கத்தின் பரபரப்பான செய்தியாக இருந்தது.சிவா அடுத்தபடியாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக அதற்கு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்தி வெளியான சில தினங்களிலேயே ஞானவேல் ராஜாவின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் படம் தோல்வி அடைந்ததால் சூர்யா-சிவா படத்தைத் தொடங்குவதில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் சூர்யாவின் இயக்குநர் சிவா ரஜினியை அவர் இல்லத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்தது பெரும் கேள்விக்குறியாகியிருந்தது. ரஜினி-சிவாவின் சந்திப்பில் அவரிடம் ரஜினி தனது அடுத்த படத்துக்கான கதை கேட்டிருப்பதாகவும் ‘பேட்ட’ படத்தோடு ரிலீஸாகி அதகளம் செய்த ‘விஸ்வாசம்’ டைரக்டரை வைத்தே அஜீத்தை விட தான் எவ்வளவு பெரிய வசூல் மன்னன் என்று காட்டவேண்டும் என்று ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் சில யூகங்கள் நிலவிவந்தன.

அடுத்த இரண்டு மாதங்களில் மட்டும் கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத், கார்த்திக் சுப்பாராஜ் ஆகிய மூன்று இயக்குநர்களிடம் மும்முரமாகக் கதை கேட்ட ரஜினி இறுதியாக சிவாவை டிக் அடித்துவிட்டதை அவரது வட்டாரம் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் இன்று சற்றுமுன்னர் இயக்குநர் சிவாவை தனது போய்ஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்து இரண்டாவது முறையாக சந்தித்திருக்கிறார் ரஜினி. ‘தர்பார்’படத்தைப் பொறுத்தவரை ரஜினியின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதால் தனது தேதிகளை வீணடிக்காமல் அடுத்த படத்தைத் துவங்கிவிருக்கிறார் ரஜினி. அப்போ அரசியல் எப்போ என்கிறீர்களா? விமான நிலையத்தில் அது குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் ரஜினி எஸ்கேப் ஆகும்போதே புரிந்துகொள்ளவேண்டாமா பாஸ்.