தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் பற்றி, இந்த சமூகத்தின் மீது அக்கறையுள்ள அணைத்து நடிகர், நடிகைகளும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் கமல் முதலமைச்சர் பன்னீர் செல்வதை பாராட்டி பல ட்விட் போட்டுள்ளார். அதே போல எம்.ஜி.ஆர் ன் ஆஸ்தான பிரியர் கே.பாக்யராஜ் நேற்று பன்னீர் செல்வதை அவரது வீட்டில் சந்தித்து தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்தார்.

ஆனால் இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஆதிக்க ரசிகர்களை கொண்ட, நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் தரத்தில் திரையுலகினரால் மதிக்கப்படும் கமல் ஹாசன் தொடர்ந்து முதலமைச்சர் யார் என தேர்தெடுப்பதில் சக மனிதனாக சிந்தித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கூறிய நிலையில் .

தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட ரஜினி தன்னுடைய ஆதரவு யாருக்கு என மனம் திறக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.