விஸ்வாசம் பஞ்சாயத்துகளை மறந்து அஜீத் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். தளபதி விஜயும் அட்லியுடனான அடுத்த படப்பிடிப்பில் நேற்றிலிருந்து கலந்துகொள்ளத் துவங்கிவிட்டார். ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவேண்டிய படம் மட்டும் இன்னும் துவங்கப்படாமல் சில கிசுகிசுக்களுக்கு இடம்கொடுத்தபடியே வெயிட்டிங்கில் இருக்கிறது.

‘பேட்ட’ படத்துக்குப்பின் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில்தான் நடிக்கிறார் என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும் அப்படத்தின் டைட்டில் தொடங்கி, தயாரிப்பாளர், ஹீரோயின் மற்ற டெக்னீஷியன்கள் எதுவும் இறுதி செய்ய்ப்படவில்லை. இந்நிலையில் படத்துக்கு’ நாற்காலி’ என்பது டைட்டில் அல்ல. தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்’ என்று எரிச்சலுடன் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டியிருந்தார்.

இந்த எரிச்சலுக்குப் பின்னால் ஒரு பெரும் அதிர்ச்சி செய்தி இருப்பதாக, மிக சமீபத்தில் ஒரு பரபரப்பு செய்தி ஒன்று நடமாடத்துவங்கியிருக்கிறது. அதாவது ‘பேட்ட’ புரமோஷன் தொடர்பாக தொடர்ந்து ரஜினியைச் சந்தித்து வந்த இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், ரஜினியை இன்னும் இளமையாகக் காட்டும் கதை ஒன்று சொல்லி மீண்டும் அவரை வைத்தே இயக்கும் விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

‘பேட்ட’ விஸ்வாசத்துக்கு முன்னால் லைட்டாகத்தோற்றதே ஒழிய ரஜினியைப் பொறுத்தவரை ‘2.0’ வை விட வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயர் பெற்றுத்தந்த படம்தான். இதனால் குழப்பத்துக்கு ஆளான ரஜினி கார்த்திக் சுப்பாராஜிடம் ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, முடிவெடுக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். கார்த்திக்கின் இந்த குறுக்குசால் ஓட்டலால் தன் படம் தாமதாகுமோ என்று டென்சனுக்கு ஆளாகியிருக்கிறாராம் முருகதாஸ்.