ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி கூட்டணியின் ‘தர்பார்’பட ரஜினி கெட் அப் வலைதளங்களில் லீக்காகி வைரலாகிவருவதால் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் டென்சனாகியுள்ளனர். மும்பை போலீஸாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி இச்சம்பவம் நடந்துள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக அங்குள்ள கடற்கரை ஓரம் ஒன்றில் ரஜினி தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பில் ரஜினி இருப்பதை அறிந்து ஏராளமானவர்கள் அவரை பார்க்க அங்கு திரண்டனர்.நேற்று  காட்சியை முடித்துவிட்டு நடிகர் ரஜினி தனது வாகனத்தில் ஏற வந்த போது அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களில்  அவரை புகைப்படமும் வீடியோவும்  எடுத்துள்ளனர்.

அப்போது மும்பை மாநகர காவல்துறை உடையில் நடிகர் ரஜினி செம ஸ்டைலாக இருக்கும் காட்சியை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது.ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஏராளமான புகைப்படங்கள் வெளியான நிலையில் முருகதாஸ் கெடுபிடி காட்டினார். தந்து ட்விட்டர் பக்கங்களில் புலம்பித்தள்ளினார். அவரது புலம்பலை பொதுமக்கள் பொருட்படுத்துவதாக இல்லை.நேற்றைய ரஜினியின் கெட் அப்பை ஏராளமான பொதுமக்கள் எடுத்திருப்பதால் விரைவில் ஒரு ஆல்பமே வெளியாகும் சாத்தியம் இருக்கிறது.