*    சீயானின் மகன் துருவ் நடித்த ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ்வின் நடிப்புக்கு ஏகப்பட்ட அப்ளாஸ். ‘அப்பன் பெயரை காப்பாத்திட்ட’ என்று சீனியர் சினிமாக்காரர்கள் முதுகில் தட்டிக் கொடுக்கின்றனர். ஆனால் தண்ணி, தம்மு, லிப் கிஸ்ஸுன்னு இந்தப் படத்தில் அநியாயத்துக்கு அசைவமாய் நடித்துவிட்ட துருவ், அடுத்த படங்களில் சைவ ரூட் எடுக்கிறாராம். 
(பேசாம ராஜகுமாரன் இயக்கத்துல துருவ் வெச்சு ‘விண்ணுக்கும் மண்ணுக்கும் பார்ட் 2’ எடுங்களேன் சீயான். )

*    எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும்! எனும் வெறியில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். கடைசியாய் ரிலீஸான ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஹிட்டா இல்லையா? என்று அதை தயாரித்த சன் டி.வி.யில் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் வைக்க வேண்டிய நிலைமை. இந்த சூழலில் சிவாவின் அடுத்த படமான ‘ஹீரோ’ படத்தின் கதை, ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ படத்தின் பக்கா தழுவல் என்று கோலிவுட்டில் கதகதப்பு.
(இரும்புத்திரை மித்ரன் கொஞ்ச நாளா அட்லீ கூட சுத்துனீங்களா?)

*    நயன் தாரா சின்னப்பொண்ணாக இருந்த போது கேரளாவின் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்தார். அப்போது அவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியின் க்ளிப்பிங் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து நயன் டென்ஷனாவார்! என்று விக்னேஷ் சிவன் வரை நினைத்தனர். ஆனால் மேடம் அதை ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி பார்த்து ரசிக்கிறாராம். 
(ரொம்ப ரீவைண்ட் பண்ணாதீங்க, பழைய ஆளுங்க சில பேர் க்யூவுல வந்துட போறாங்க)

*    எந்த பிறவியில் செய்த புண்ணியத்தாலோ சுமார் மூஞ்சி விஜய்சேதுபதி, தமிழ் கூறும் கோலிவுட் உலகில் மாஸ் ஹீரோவாகிட்டார். ஆனால் இந்த கருத்த மச்சானுக்கு சமீபகாலமாக அடுத்தடுத்து படங்கள் அடி. இந்த லட்சணத்தில் விஜய்க்கு வில்லனாக வேறு ஃபார்ம் ஆகிட்டார். இதனால் இவரை ஹீரோவாக வைத்து இப்போது படமெடுக்கும் நிறுவனங்கள் டென்ஷனில் இருக்கின்றனவாம். 

*    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் ‘கிழி கிழி’ சிங்கிள் டிராக் ரிலீஸாகி இருக்கிறது. பேட்ட படத்தில் ‘மரணம், மாஸு மரணம்’ பாட்டு டைப்பில் இது இருப்பதாக சிலரும், அண்ணாமலை படத்தின் ‘வந்தேன் டா பால்காரன்’ பீட் அப்படியே இருப்பதாக சிலரும் போட்டு கிழி கிழிஎன கிழிக்கின்றனர். 
(வுடுங்க பாஸு, மூணுமே ரஜினி படப்பாட்டுதானே, மூணையும் பாடுனது எஸ்.பி.பி.தானே!)