இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் அமர்க்களமான ‘தர்பார்’பட இரண்டாவது லுக் போஸ்டர் ஓனம் பண்டிகையை முன்னிட்டு, சில நிமிடங்களுக்கு முன்னர், அதாவது மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அதை ரஜினி ரசிகர்கள் வலைதளங்களில் வழக்கம்போல் வைரலாக்கி வருகின்றனர்.

இன்று காலை ‘ஒரு ஓணம் பண்டிகை சர்ப்ரைஸ்...ரசிகர்களுக்காக தலைவரின் தர்பார் பட செகண்ட் லுக்கை வெளியிடுகிறோம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், தயாரிப்பு நிறுவனமான லைகாவும் ஒரு சேர அறிவித்திருந்தனர். அதன்படி வெளியிடப்பட்ட செக்ண்ட் லுக்கில் செம மாஸாக காட்சி அளிக்கும் ரஜினி, வெறும் கருப்பு நிற பனியனியில் வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்கிறார். இளமைத் தோற்றத்திலும் இல்லாமல் ஒரிஜினல் தோற்றத்திலும் இல்லாமல் நட்ட நடு செண்டர் வயது தோற்றம் ஒன்றில் காட்சி அளிக்கிறார்.

அந்த போஸ்டர் வைரலாகிவரும் நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் சர்ப்ரைஸாக ஒரு செய்தி உலவுகிறது. ‘தர்பார்’ வெளியாகவிருக்கும் 2020ல் கொண்டாடப்படும் பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 
11-01-20 சனி - விடுமுறை 
12-01-20 ஞாயிறு - விடுமுறை. 
13-01-20 திங்கள் - மட்டுமே வேலைநாள்
14-01-20 செவ்வாய் - போகி விடுமுறை 
15-01-20 புதன் - பொங்கல் 
16-01-20 வியாழன் - மாட்டு பொங்கல் 
17-01-20 வெள்ளி - காணும் பொங்கல்  
18-01-20 சனி - விடுமுறை 
19-01-20 ஞாயிறு-விடுமுறை.இதில், திங்கட்கிழமை மட்டுமே வேலை நாள் என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளித்து எடப்பாடி இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கான ஜாக்பாட் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?