Asianet News TamilAsianet News Tamil

கமல்ஹாசனின் ‘முதல் தீவிரவாதி இந்து’ பேச்சுக்கு ரஜினி சொன்ன பதில்...

கமலின் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற பேச்சு நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ள நிலையில் கமலின் நண்பரும் பா.ஜ.க. ஆதரவாளருமான ரஜினி அது குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
 

rajini's answer to kamal's speech
Author
Chennai, First Published May 14, 2019, 10:13 AM IST

கமலின் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற பேச்சு நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ள நிலையில் கமலின் நண்பரும் பா.ஜ.க. ஆதரவாளருமான ரஜினி அது குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டார்.rajini's answer to kamal's speech

தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய கமல், ‘நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன. இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவன். இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். சமநிலையோடு இங்குள்ள மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்கும். நான் ஒரு நல்ல இந்தியன் என பெருமையுடன் அறிவிக்க விரும்புகிறேன்.rajini's answer to kamal's speech

இந்த இடம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்லவில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என கமல் குறிப்பிட்டார். 

கமலின் இப்பேச்சு பா.ஜ.கவினர் மற்றும் இந்துக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் ராஜேந்திர எல்லோருக்கும் ஒரு படி மேலேபோய் கமலின் நாக்கை அறுக்கவேண்டும் என அநாகரீகமாக பேட்டியளித்தார்.

இந்நிலையில் மும்பை ‘தர்பார்’ படப்பிடிலிருந்து சிறிய ஓய்வு கிடைத்ததால் நேற்று இரவு  சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் கமலின் பேச்சு குறித்து கருத்து கேட்டபோது அது குறித்து தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்ததோடு நிருபர்களின் வேறு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் தவிர்த்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios