தமிழ் திரையுலகின் பிரபலமான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படம் நடித்து முடித்த பின்னர் கடந்த மே மாதம் அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜூலையில் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமையன்று மருத்துவ பரிசோதனைகக்காக தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அமெரிக்கா சென்றார். இதனிடையே ரஜினிகாந்த் தீபாவளியை அமெரிக்காவிலேயே கொண்டாடுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ரஜினிகாந்த இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
