இத்தனைக்கும் இரண்டு படங்களுக்கும் இடையில் விமர்சன ரீதியாக பெரிய வித்தியாசங்கள் இல்லை. தனக்கு எதிராக அஜீத் செய்த சேட்ட எடுபட்டுவிட்டதை ரஜினி அவ்வளவு ஈசியாக எடுத்துக்கொள்ளவில்லை.
இன்னும் சில தினங்கள் அமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு ஜனவரி 20ம் தேதிக்கு மேல் சென்னை திரும்புவதாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவே அவசர அவசரமாக சென்னை திரும்பினார். அவரது திடீர் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு ஓய்வு எடுப்பதற்காகவும், இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணம் தொடர்பான பஞ்சாயத்துக்களை பேசி முடிப்பதற்காகவும் அமெரிக்கா சென்றிருந்தார் ரஜினி. இதனால் ‘பேட்ட’ ரிலீஸ் சமய புரமோஷன்களில் கூட அவர் பங்கேற்கவில்லை. முன்னர் திட்டமிட்டபடி அவர் ஜனவரி 20ம் தேதிக்குப் பிறகே அவர் சென்னை திரும்புவதாக இருந்தது. ‘பேட்ட’ பட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் மீது அந்த அளவுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால்...
ஆனால் நேற்று காலை முதல் ‘பேட்ட’ படம் குறித்து ரஜினிக்கு வந்த செய்திகள் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை. அதிலும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு அடுத்த இடம்தான் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனைக்கும் இரண்டு படங்களுக்கும் இடையில் விமர்சன ரீதியாக பெரிய வித்தியாசங்கள் இல்லை. தனக்கு எதிராக அஜீத் செய்த சேட்ட எடுபட்டுவிட்டதை ரஜினி அவ்வளவு ஈசியாக எடுத்துக்கொள்ளவில்லை.
’பேட்ட’ படத்தைப் பொறுத்தவரை ரஜினிக்கு மைனஸாக சொல்லப்பட்டவை படத்தின் நீளமும், விஜய்சேதுபதியின் இவர் மகனா,வில்லனின் மகனா என்று வைக்கப்பட்ட போர்சனும்தான். இவற்றை அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு சரிக்கட்டமுடியாது. இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜுடன் அமர்ந்து அந்தக் குறைகளை சரி செய்வது முதல் வேலை என்று ரஜினி நினைத்தார்.
அடுத்தது அஜீத்துடனான இந்தப் போட்டியில் தோற்றுவிடுவதென்பது ஆகப்பெரிய அவமானம். அஜீத் எப்படியும் பட புரமோஷன் பக்கமே தலைவைத்துப்படுக்கமாட்டார் என்கிற நிலையில், இறங்கி அடிக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி. அதற்காகத்தான் அமெரிக்காவிலிருந்து அவசர அவசரமாக இறங்கிவந்திருக்கிறார் ரஜினி.
நேற்றைய விமான நிலையப் பேட்டியில், ‘பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்’ என்று கூறியது ச்சும்மா ஒரு ட்ரெயிலர்தான். இந்த ஒரு வாரத்தில் மட்டும் ரஜினி எத்தனை முறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார் என்று பொருத்திருந்து பாருங்கள்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2019, 10:13 AM IST