சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த மாதமே ரசிகர்களை சந்தித்து பேசுவதாக கூறப்பட்டு சில பிரச்சனைகள் காரணமாக அந்த நிகழ்ச்சி  நடைபெறாமல் நின்று போனது.

தற்போது மே 15 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் ரஜினி அவருடைய ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும் ரஜினியை சந்திக்க வரும் அனைத்து ரசிகர்களும் தங்களுடைய அடையாள அட்டையை எடுத்து வருமாறும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு ரஜினி சில அன்பு கட்டளைகள் போட்டுள்ளார், அது என்னவென்றால், தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் யாரும் மாலை, சால்வேம், போன்று எதுவும் எடுத்து வர வேண்டாம் என்றும் முக்கியமாக தன்னுடைய காலில் எந்த ஒரு ரசிகரும் விழ வேண்டாம் எனறும் கூறியுள்ளார்.