ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனத் தயாரிப்பில்,  ரஜினி நடிப்பதாக இருக்கும் படம் அவரது  சம்பளப் பஞ்சாயத்தால் அடுத்த கட்டத்துக்கு நகராமல் தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

‘பேட்ட’ படத்துக்குப் பின்னர் ரஜினி நடிப்பதாக பணிகள் நடந்துகொண்டிருக்கும் படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பது. துவக்கத்தில் வெளியிலிருந்து தனக்கு பெரிய சம்பளம் ஆஃபராக வருகிறதா என்று தெரிந்துகொள்வதற்காக இன்ன நிறுவனம் என்று முடிவு செய்யாமல் ரஜினி முருகதாசை மட்டும் வேலை செய்யச்சொல்லியிருந்தார். அந்த புராஜக்டுக்காக ரஜினியை தொடர்பு கொண்ட சில தயாரிப்பாளர்கள் ரஜினிக்கு அதிக பட்சம் 50 கோடி வரையே சம்பளமாகத் தரத் தயாராக இருந்தனர்.

ஏனெனில் இதே சம்பளத்தைத் தான் ரஜினி ‘2.0’ படத்துக்காக லைகாவிடமிருந்து வாங்கியிருந்தார். அடுத்த படத்துக்கு தன் சம்பளத்தை ரெண்டு மடங்காக உயர்த்தும் சபலத்தில் இருந்த ரஜினிக்கு இது பேரதிர்ச்சியைத் தரவே மீண்டும் லைகாவிடமே முருகதாஸ் படத்தை ஒப்படைத்திருக்கிறார். ஆனால் லைகா நிறுவனமும் அதே 50லேயே நிற்பதால் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் காலம் கடத்தி வருகிறார் ரஜினி.

50 கோடிக்கு ரஜினி சம்மதிக்காமல் இருப்பதற்கு இன்னொரு வலுவான காரனமும் சொல்லப்படுகிறது. பொங்கலை ஒட்டி ரஜினியின் திடீர் போட்டியாளராக மாறியுள்ள அஜீத், போனிகபூர் தயாரிப்பில் அடுத்து நடிக்கவிருக்கும் இரு படங்களுக்குமே தலா 50 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம். அதே சம்பளத்தில் தானும் நடிப்பதா என்ற தயக்கம் தான் ரஜினியை அடுத்த படத்துக்கு நகரவிடாமல் நிறுத்திவைத்திருக்கிறது என்கிறது லைகா வட்டாரம்.