அண்ணாத்த இயக்குனர் சிவா கூட்டணியில் தான் மீண்டும் ரஜினி நாயகனாக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாவை தொடர்ந்து ரஜினியை இயக்க சிவா தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ள இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி ,பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருந்தது. கொரோனா ஊரடங்கு, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று என தாமதமான "அண்ணாத்த" சன் பிக்சர்ஸின் பிளான் படி தீபாவளி வெடியாக ரிலீசானது. சகோதரி அன்பை சொல்லும் இந்த படம் பெண் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ரிலீசான சில நாட்களிலேயே 150 கோடி வசூலை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கிடையே படம் அருமையாக வந்துள்ளதாக கூறி சிறுத்தை சிவாவுக்கு முத்தமிட்ட ரஜினி மீண்டும் தன்னை வைத்து இயக்க சிவாவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 2019 ம் ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது திரைக்கு வந்த விஸ்வாசத்தின் வெற்றி மூலம் சிவாவிற்கு வாயில் தட்டிய வாய்ப்பு மீண்டும் அண்ணாத்த மூலம் கிடைத்துள்ளது. விஸ்வாசம் படத்தை பார்த்த பிறகே சிவாவை நேரில் அழைத்து தன்னை வைத்து படம் இயக்குமாறு ரஜினி தெரிவித்ததாக சிவா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் ரஜினி தனது அடுத்த படத்தையும் சிவாவிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெய்பீம் வெற்றியை அடுத்து பாண்டியராஜன் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா சிவாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகிவுள்ளதாக தெரிகிறது. சிறுத்தை சிவா- ஸ்டூடியோ கிரீன் - டி.இமான் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படம் சூர்யாவின் வேல் பட சாயலில் இருக்குமென சொல்லபப்டுகிறது. சிறுத்தை படத்தின் மூலம் கூட்டணியமைத்த சிவா- ஸ்டூடியோ கிரீன் இரண்டாம் முறையாக சூர்யா படத்தில் இணைகின்றனர். வெற்றி மாறனின் வாடிவாசலுக்காக காத்திருந்த சூர்யா அதற்கு முன்பாக சிவா இயக்கத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது.

இதை தொடர்ந்து ரஜினிக்கு மீண்டும் எமோஷன் கலந்த மசாலா கதையை உருவாக்க சிவாவின் இயக்குனர் குழு கதையை எழுதி வருவதாகவும், விரைவில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகிறது. ஆனால் சமீபத்தில் உடல்நல பாதிப்பு காரணமாக அறிவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் ரஜினி தனது அடுத்த படத்திற்கு ரெடியா என்னும் கேள்வி ரஜினி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.