Rajini next movie : ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்களுக்கான ப்ரோமோ சமீபத்தில் தான் வெளியாகியுள்ளது..எனவே இந்த அப்டேட் கட்டாயம் ரஜினி நெக்ஸ்ட் குறித்து தான் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்..
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் இன்னும் இறுதி கட்டத்தை நெருங்கவில்லை என்றே தெரிகிறது.
இதற்கிடையே நெல்சன் அடுத்தாக ரஜினியை இயக்கவுள்ளதாக தெரிகிறது.. கலவையான விமர்சனங்களை பெற்றது...இந்தியா தொடர்ந்து மாஸ் கதையை ரஜினி எதிர்பார்ப்பதாக தெரிகிறது. பல இயக்குனர்கள் கதை சொன்ன போதிலும் நெல்சனின் கதையே ரஜினி மிகவும் பிடித்துள்ளதாக தெரிகிறது. எனவே ரஜினி அடுத்தாக நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளது..அதில் 6 மணிக்கு வெளியப்போகும் மாஸ் அப்டேட் என்று மட்டுமே குறிப்பிடப்படுள்ளது,..ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்களுக்கான ப்ரோமோ சமீபத்தில் தான் வெளியாகியுள்ளது..எனவே இந்த அப்டேட் கட்டாயம் ரஜினி நெக்ஸ்ட் குறித்து தான் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்..

