டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கவிருக்கும் ரஜினி, சிவா காம்பினேஷனின் ‘தலைவர் 168’படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருப்பதாக பரவி வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று சூர்யா தரப்பு கடுமையாக மறுக்கிறது. இது தொடர்பாக தங்களை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றும் அப்படியே அழைப்பு வந்தாலும் ஜோதிகா கண்டிப்பாக நடிக்கமாட்டார் என்றும் அதே தரப்பு அடித்துக்கூறுகிறது.

இமயமலை கிளம்புவதற்கு முன், இசையமைப்பாளர் தவிர்த்து தனது அடுத்த படத்தின் அத்தனை டெக்னீஷியன் பெயர்களுக்கும் டிக் அடித்து ஓ.கே.சொன்ன ரஜினி தன் படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஒரு சிறிய நிபந்தனையுடன் இயக்குநர் சிவாவிடமே ஒப்படைத்துவிட்டாராம். அந்த நிபந்தனையாகப்பட்டது, அப்படி தேர்ந்தெடுக்கப்படும் நடிகை இதற்கு முன்னர் தனக்கு ஜோடியாக நடித்திருக்கக்கூடாது என்பது.

இதை ஒட்டி, சந்திரமுகியில்  நடித்திருந்தாலும் அப்படத்தில் ஜோதிகா ரஜினிக்கு ஜோடி இல்லயே என்ற கோணத்தில் அவர் பெயர் பலமாக அடிபட ஆரம்பித்தது. ஆனால் அச்செய்தியை மறுக்கும் சூர்யா தரப்பு, கண்டிப்பாக ஜோதிகா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கமாட்டார். அவ்வாறு பரவும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று மறுத்து வருகிறது. ஸோலோ ஹீரோயின் பாத்திரங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா ரஜினி படத்தில் ஒரு டம்மி ஹீரோயினாக எப்படி நடிப்பார் என்ற லாஜிக்கை கொஞ்சம் யோசிச்சிட்டு நியூஸ் போடுங்க பாஸ்...