Rajini meets fans this month Its also on May 15th ...

போன மாதம் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்திக்க முடிவு செய்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், சில காரணங்களால் திடீரென்று அந்த சந்திப்பை அவராகவே ரத்து செய்தார்.

மேலும், சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான விளக்கத்தையும் அறிக்கை மூலம் தெரிவித்தர். ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். அதனால், வேறு ஒரு நாளில் கண்டிப்பாக சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வருகிற மே--15 ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார் என சினிமா வட்டார தகவல் கசிந்துள்ளது.

மே 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சந்திப்பில் கரூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.