நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்திக்கிறார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். பார்கோடுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரஜினிகாந்தை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். மாவட்டத்திற்கு 200 வீதம் 600 ரசிகர்களை சந்திக்க உள்ளார். 

மேலும், 15ந்தேதி முதல் 19ந்தேதி வரை 4 நாட்களுக்கு சென்னையில் ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவெடுத்துள்ளார். ரஜினியை சந்திக்க வருபவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல்  தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். 

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க உள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.