தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தி.மு.க தலைவர் கருணாநிதியை இன்று கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த ஒன்றரை மாதமாக உடல் நலம் பாதித்து வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதி திடீரென உடல் நலம் பாதித்ததால் ஆழவார் பேட்டை காவேரி மருத்துமனையில் அனுமதிக்கபட்டார்.

அங்கு ஒரு வாரம் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அவரை ஸ்டாலின் , கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர்கள் , சந்திப்பு திடீரென நிகழ்ந்துள்ளதால் அரசியல் சம்பந்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தாம் கருணாநிதியை சந்தித்தது அவரை பார்த்து உடல் நலம் பற்றி விசாரிக்க தான் என கூறியுள்ளார் . அதே போல் கருணாநிதியை இன்று கவிஞர் வைரமுத்துவும் சந்தித்து நலம் விசாரித்தார்.