’ உன் புருஷன் தனுஷை நடிக்கிற வேலையை மட்டும் பாக்கச்சொல்லும்மா மகளே. என்னை வச்சி டைரக்‌ஷன் பண்ணப்போறதா பேட்டி குடுத்து என் பொழப்பைக் கெடுக்கவேண்டாம்’ என்று லக்னோ  படப்பிடிப்பிலிருந்த ரஜினி தனது மகளும் தனுஷின் மனைவியுமாகிய ஐஸ்வர்யாவிடம் பேசியதாக ‘பேட்ட’ வட்டாரங்கள் போட்டுக்கொடுக்கின்றன.

ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். ஓரளவு வெற்றிப்படமான அதை உண்மையில் இயக்கியவர் ‘திருடா திருடி’ டைரக்டரான சுப்ரமணிய சிவா. ஆனாலும்  ஒரு வெற்றிப்படம் கொடுத்த டைரக்டர் என்ற மிதப்பில் மனைவி மூலம் நீண்டகாலமாகவே ரஜினியை இயக்க வாய்ப்புக்கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தார் தனுஷ்.

அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருந்த ரஜினிதான், ‘வடசென்னை’ பிரஸ்மீட்டில் ‘ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அதை கடவுளின் அனுக்கிரகமாக நினைத்து மகிழ்வேன்’ என்று தனுஷ் சொன்னதற்கு கடுப்பாகியிருக்கிறார்.

இப்படி தற்செயலாகப் பேட்டி கொடுப்பதுபோல் கொடுத்து மீண்டும் தனுஷ் நச்சரிக்கத்தொடங்குவார் என்ற ரஜினியின் அச்சமே மகள் மூலம் ரஜினி விடுத்த இந்த எச்சரிக்கைக்குக் காரணம் என்கிறார்கள் பேட்டைவாசிகள்.