rajini issue thamizhisai replay
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த படத்திற்கான போட்டோஷூட் இன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இந்த படம் பிரபல மும்பை தாதா 'ஹாஜி மஸ்தான்' வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படவுள்ளது என்கிற செய்தி வெளியானதை அடுத்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனிடம் இருந்து ரஜினிக்கு மிரட்டல் கடிதம் வந்தது.
இந்நிலையில் இந்த மிரட்டல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்று முன்னர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியபோது, 'ரஜினி உள்ளிட்ட யார் மீதான மிரட்டல்களையும் அனுமதிக்க முடியாது' என்று கூறினார்.
