கடவுளிடம்  உள்ளது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏதோ ஒரு பவர் இருக்கிறது என  இயக்குனர் பாரதிராஜா மனம் திறந்து பேசியுள்ளார்.  எப்போதும் நடிகர் ரஜினிகாந்துக்கும் திரை இயக்குனர்  பாரதிராஜாவிற்கும் இடையே மெல்லிய கருத்து முரண்கள்  இருந்து வருவதை அனைவரும் அறிவர். பல நேரங்களில் அதை பாரதிராஜாவை சொல்ல நாம்  கேட்டிருக்கிறோம்.  ஆனாலும் இருவருக்குமிடையே ஒரு அசைக்க முடியாத நட்பு இருந்து வருகிறது.  

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினியின் பிறந்த நாளையொட்டி வேலூரில் விழா ஒன்று நடைபெற்றது .  அதில் இயக்குனர் பாரதிராஜா ,   திரைப்படதயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்ட இன்னும் சிலர் பிரபலங்கள் கலந்து கொண்டனர் . அந்நிகழ்ச்சியில் பேசிய  பேசிய இயக்குனர் பாரதிராஜா ,  16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு  பேசப்பட்ட சம்பளத் தொகையிலிருந்து 500 ரூபாய் பாக்கி வைத்ததாகவும், அதை இப்போது பார்த்தால் கூட அவர்  நினைவில் வைத்து கேட்கிறார் எனவும் ரஜினிக்கும் தனக்கும் இடையேயான நட்பு குறித்து  நகைச்சுவையாக பேசினார். இன்னொருவரால்  நடிகர் ரஜினிகாந்த் ஆக பிறக்க முடியாது எனக் குறிப்பிட்டார் . 

 மற்றவர்களில் இருந்து ரஜினி வேறுபட்டு காணப்பட கடவுளிடம் உள்ளது போன்ற ஏதோ ஒன்று நடிகர் ரஜினியிடமும்  உள்ளது என்றார் .  அதுதான் அனைவரையும் இழுக்கிறது எனக்கூரிய பாரதிராஜா ரஜினிகாந்துடன்,  48 ஆண்டுகால நட்பு தனக்கு உள்ளது என்றார்.  அதேநேரத்தில் அரசியலுக்கு வந்தால் கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என நடிகர் ரஜினிகாந்துக்கு தான் அறிவுறுத்தி உள்ளதாகவும்  இயக்குனர் பாரதிராஜா குறிப்பிட்டார்.