சுப்பிரமணியன் சுவாமியை விட ரஜினிகாந்த் இரு மடங்கு அறிவுடையவர் என்று ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் காட்டமாகக் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த ரசிகர்களுடனான சந்திப்பில் ரஜினிகாந்த் ஆண்டவன் ஆணையிட்டால் அரசியலுக்கு வருவதாக கூறினார். அதன்பிறகு அவரது அரசியல் வருகை பற்றி தொடர்ந்து பேசப்படுகிறது.

இந்த நிலையில், தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினி முட்டாள் என்று கூறியதுடன் ஒருமையிலும் பேசியுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “சுப்பிரமணியன் சுவாமியை விட ரஜினிக்கு இரண்டு மடங்கு அறிவு உண்டு.

தனது அரசியல் பிரவசேம் பற்றி பேச வேண்டாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரஜினியை பற்றி சுப்பிரமணியன் சுவாமிக்கு என்ன தெரியும்? ஏன் இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்? இது சரியா? என்று பொறிந்து தள்ளினார் ராஜ்பகதூர்.