வரும் ஞாயிறன்று சென்னை,நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற கமல் 60’ இளையராஜா இன்னிசை நிகழ்ச்சியில் ரஜினி உறுதியாகக் கலந்துகொள்கிறார் என்று அந்நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்துள்ள விஜய் டிவி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 

கமலின் 60 ஆண்டுகால கலைச்சேவை தொடர்பான இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில் மூன்றாம் நாள் நிகழ்வு வரும் ஞாயிறன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக இளையராஜாவின் இசைக்குழு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடத்தி வரும் ரிகர்சல்களில் கமலும் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் தொடர்ந்து பங்குபெற்று வருகின்றனர்.

ரஜினி தொடங்கி தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று நம்பப்படும் இவ்விழாவில் அஜீத்தும் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் பிரபலங்களுக்கு கமல் சார்பாக அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் விஜய் டிவி மகேந்திரன் கமல் சார்பாக ரஜினிக்கு பிரம்மாண்டமான அழைப்பிதழை வழங்கி அவர் நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் ட்விட் செய்திருக்கிறார். ரூ 999 முதல் 50 ஆயிரம் வரை பெரிய விலை வைக்கப்பட்டிருந்தாலும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருவதாக விஜய் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது.