முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் பலரும் ரஜினியை அரசியலுக்கு வரும்படி அழைத்தனர்.ஆனால் ரஜினிகாந்த் இதுவரை அரசியல் பற்றி எந்த ஒரு பேச்சையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வந்தார்.

ஏற்கனவே பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது மிக பெரிய கேள்விக்குறியாகவே இருந்த நிலையில் தற்போது இதற்கு விடை தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மற்றும் பத்திரிகையாளர்களிடம் அரசியலுக்கு வருவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினி தன்னுடைய ரசிகர்களிடமும் அரசியல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் . விரைவில் ரஜினிகாந்த் ஒரு கட்சி அரமிக்கப்போவதாகவும், இதில் மறைத்த சோ அவர்களுடைய நெருங்கிய நண்பரான குருமூர்த்திய துணையுடன் அரசியலில் கால் பதிப்பார் சூப்பர்ஸ்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.