ரஜினிக்கு பீஸ்ட் படத்தின் ஸ்பெஷல் ரஷ் போடப்படுவதை விஜய்யிடம் முதலிலேயே சொல்லி, ஒப்புதல் வாங்கிவிட்டே செய்துள்ளனர். அவரும் கூலாக ‘இதுக்கு போயி ஏன் என்கிட்ட கேட்டுகிட்டு. சார் தாராளமா பார்க்கட்டும். ஐ லைட் இட்’ என்று வழக்கம்போல் பவ்யம் காட்டியுள்ளார்.
வலிமை ரிலீஸ் அப்டேட்ஸ், பீஸ்ட் செகண்ட் சிங்கிள் அப்டேட்ஸ் இவற்றையெல்லாம் தாண்டி இப்போது ரசிகர்களால் அதிகம் கூகுள் செய்யப்படுவது ‘தலைவர் 169 நடிகர்கள் யார்’ எனும் அப்டேட்ஸ்தான். அதில் ஒரு ஸ்கூப் இப்போது கசிந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்க, சன்பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்கும் புதிய படம்தான், இன்னும் பெயரிடப்படாத ‘தலைவர் 169’. நெல்சன் படங்கள் என்றாலே முதல் பாதியில் முழுக்க பிளாக் காமெடியும், இரண்டாம் பாதியில் அதிரிபுதிரி ஆக்ஷனும் நிரம்பி வழிவது வழக்கம். டாக்டர் வரை இதான் அவரது ஸ்டைல். ஆனால் விஜய்யை வைத்து இப்போது அவர் இயக்கியிருக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் முழுவதுமே ஆக்ஷன் அள்ளு தெறிக்கும்! என்கிறார்கள்.
இந்நிலையில்தான் ரஜினியை வைத்து நெல்சன் படம் இயக்குவது உறுதியாகியுள்ளது. நெல்சன் படமென்றதும் ரஜினியிடம் அவரது சினிமா நண்பர்கள் ‘அவன் சின்னப்பையனாட்டமா படமெடுப்பானே. டாக்டர் படம் பாருங்க உங்களுக்கே புரியும் சார். அந்தப் படம் ஏன், எப்படி அப்படி ஓடுச்சுன்னு யாருக்கும் தெரியாது. வேற ஹிட் படம் வராததாலே அது ஓடி, சிவகார்த்தியை காப்பாத்துச்சு. அதனால பார்த்து முடிவெடுங்க’ என்றார்கள்.

ஆனால் நெல்சனிடம் அதையெல்லாம் ஏற்கனவே பேசிவிட்ட வகையில், ரஜினியோ சிரித்தபடி தலையாட்டிவிட்டார் தன் நண்பர்களிடம். அதாவது நெல்சனிடம் ரஜினி ஏற்கனவே இதே கேள்வியை கேட்டபோது, பீஸ்ட் படத்தின் கிட்டத்தட்ட பாதி பட காட்சிகளை ரஜினிக்கு ஸ்பெஷல் ரஷ் போட்டுக் காண்பித்துள்ளார்கள் இயக்குநரும், சன் பிக்சர்ஸ் தரப்பும். நெல்சனின் பழைய பட தோரணைகள் இல்லாமல் முழுக்க முழுக்க ஃப்ரெஷ் பீஸாகவும், புதிய கோணத்தில் அணுகப்பட்டதாகவும் இருந்துள்ளது. இதைப் பார்த்துவிட்டு, சட்டென சேரிலிருந்து எழுந்த ரஜினி ‘ஹே! சூப்பர்பா’ என்று கைதட்டியபடியே, நெல்சனை கட்டிப் பிடித்து என்கரேஜ் செய்துவிட்டே அவருடனான படத்துக்கு டபுள் ஓ.கே. சொல்லியுள்ளார்.

ரஜினிக்கு பீஸ்ட் படத்தின் ஸ்பெஷல் ரஷ் போடப்படுவதை விஜய்யிடம் முதலிலேயே சொல்லி, ஒப்புதல் வாங்கிவிட்டே செய்துள்ளனர். அவரும் கூலாக ‘இதுக்கு போயி ஏன் என்கிட்ட கேட்டுகிட்டு. சார் தாராளமா பார்க்கட்டும். ஐ லைட் இட்’ என்று வழக்கம்போல் பவ்யம் காட்டியுள்ளார். ரஷ் பார்த்துவிட்டு விஜய்யையும் போனில் பாராட்டிய ரஜினி ‘பெரிய ஹிட்டாகும் இந்தப்படம். ஆக்ஷன் காட்சியில பின்னியிருக்கிங்க விஜய்’ என்று பெரிதாய் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் ரஜினி நடிக்க, நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியும் இணைவார்! என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரித்து, அனிருத் இசையமைத்து, ரஜினி ஹீரோயிஸம் பண்ணிய ‘பேட்ட’ படத்தில் ரஜினியோடு இணைந்து நடித்திருந்தார் விஜய்சேதுபதி.
மீண்டும் அதே காம்போ இணைகிறதாம்.
