’ஏற்கனவே பா.ரஞ்சித் படத்துல நடிச்சுட்டு நான் பட்ட பாடே போதும். இனிமே அரசியல் பேசுற சப்ஜெக்டை வச்சுக்கிட்டு என் கிட்ட யாரும் கதை சொல்ல வராதீங்க’என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கோபப்பட்டதாக இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

‘காக்கா முட்டை’,’ஆண்டவன் கட்டளை’ ஆகிய இரு தரமான படங்களை இயக்கியுள்ள மணிகண்டன் தற்போது தனது மூன்றாவது படமாக கடைசி விவசாய்’என்ற படத்தை இயக்கி வருகிறார். 85 வயதுடைய நிஜ விவசாயி ஒருவர் கதையின் நாயகனாக இப்படத்தில் விஜய் சேதுபதி குறிப்பிடத்தக்க பாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். அவரது கெட் அப் கூட இரு தினங்களுக்கு முன்பு வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் விஜய் சேதுபதி பாத்திரத்தில் நடிக்கவைக்க மணிகண்டன் முதலில் ரஜியை அணுகியதாகவும், கதையக் கேட்ட அவர் பதறிப்போய்,’விவகாரமான அரசியல் பேசும் அந்தக் கதையில் தான் நடிக்க விரும்பவில்லையென்றும் ஏற்கனவே பா.ரஞ்சித்தின் கபாலி, காலா படங்களில் நடித்த வகையில் சில அர்சியல்வாதிகள் தன்மேல் கோபமாக இருப்பதாகவும் தெரிவித்து மணிகண்டனைத் தவிர்த்திருக்கிறார். அடுத்துதான் தனது நண்பர் விஜய்சேதுபதியிடம் அந்த கேரக்டரை பண்ணச்சொல்லி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.