அஜீத்தின் ‘விஸ்வாசம்’ ட்ரெயிலர் பெரும் பிரளயத்தைக் கிளப்பியதால் மிரண்டு போயிருக்கும் ரஜினியை, குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பங்குக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தி வெறுப்பேற்றி வருவதாக அமெரிக்காவிலிருந்து விமான மார்க்கமாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு வதந்தியாக இருந்து, அடுத்த சில நாட்களிலேயே உண்மைச் செய்தி ஆகிப் போன ரஜினி மகள் சவுந்தர்யாவின் இரண்டாம் திருமணம் பற்றிய செய்திதான் இது. பெரும் தொழிலதிபரான வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்ய சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அப்பாவிடம் அனுமதி வாங்கியிருந்தார் சவுந்தர்யா. ஆனால் அத்திருமணம் யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமானதாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே ரஜினியின் நிபந்தனையாக இருந்தது.

துவக்கத்தில் ரஜினியின் அந்த நிபந்தனையை சவுந்தரா,ஐஸ்வர்யா, தனுஷ் மற்றும் லதாம்மா எல்லோருமே ஒப்புக்கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அச்செய்தி இந்தியாவின் அத்தனை ஊடகங்களில் பரபரப்பாகியது. ரஜினி பயங்கர அப்செட்.

இந்நிலையில் திருமணத்தை பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டிருக்கும் ரஜினி தான் ஏற்கனவே எடுத்த முடிவின்படி, ஏதாவது ஒரு கோவிலில் யாரையும் அழைக்காமல் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ளும் திருமணமாகவே நடக்கட்டும் என்று அறிவித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்க கிளம்பிவிட்டார்.

விடுவார்களா குடும்ப உடும்புப்பிடிகள், லதா,ஐஸ்வர்யா, தனுஷ் என்று ஒவ்வொருவராய் வரிசையாய்க் கிளம்பிப்போய், ‘இப்போதான் மேட்டர் எல்லாருக்குமே தெரியுமே. அப்புறம் கல்யாணத்தை ரகசியமா நடத்தணும். கிராண்டா ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல அல்லது கல்யாண மண்டபத்துல நடத்தியே தீரணும் என்று அடம்பிடிக்கிறார்களாம். இதில் தனுஷும் வழக்கம்போல் பெண்கள் பக்கத்தில் ரஜினிக்கு எதிராக நிற்கிறாராம்.

பிள்ளைகளுக்கு தனது தர்ம சங்கடத்தைப் புரிய வைக்க முடியாமல் ’மெத்தை வாங்குனேன் தூக்கத்தை வாங்கல’ என்று மைண்ட் வாய்ஸில் பாடிக்கொண்டிருக்கிறாராம் ரஜினி.