rajini and kamal is granfathers kasthuri open talk

நடிகை கஸ்தூரி யாருடைய கருத்திற்கும் கவலைப் படாமல் தன்னுடைய மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். இதன் காரணமாகவே இவர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் போட்டால் பலரும் இவரை சீண்டிப் பார்ப்பது போல் பல கேள்விகளைத் தொடுப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய காதலனை கரம் பிடித்த சமந்தாவிடம் ரசிகர்கள் சிலர் திருமணம் முடிந்து நடிப்பீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு சமந்தா நடிப்பேன் எனக் கூறினார். இதைப் பார்த்து கஸ்தூரி, “நீங்கள் ஏன் இந்தக் கேள்வியை சைதன்யாவிடம் கேட்கக் கூடாது?” என கஸ்தூரி கேட்க, சைதன்யா ரசிகர்கள் டென்ஷன் ஆகி விட்டனர்.

இந்நிலையில் கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் , உங்களுடன் நடித்த ரஜினியும், கமல் ஹாசனும் இன்னும் ஹீரோவாக நடிக்க நீங்கள் ஏன் நடிப்பதில்லை எனக் கேட்டிருக்கிறார். இதற்கு கஸ்தூரி நானும் அதைத்தான் கேட்கிறேன். தாத்தாக்களை ஹீரோக்களாக ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஏன் திருமணமான ஹீரோயின்களை ஏற்பதில்லை என பதிலடி கொடுத்திருக்கிறார். 

இதில் இருந்து ரஜினியையும் கமலையும் தாத்தா ஹீரோக்கள் என நேரடியாக தாக்கியுள்ளார் கஸ்தூரி.