Rajini and Akshayakumars 100 feett giant balloon Now youre talking about this
ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் புரொமோஷன் பணிக்காக அப்படக்குழுவினர் 100 அடி ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளனர்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள '2.0' பட புரொமோஷன் நிகழ்ச்சி மூலம் உலகளவில் கவனத்தை ஈர்க்க அங்குள்ள ஹாலிவுட் ஸ்டுடியோவில் ரஜினி - அக்ஷய் குமாரின் புகைப்படங்கள் கொண்ட 100 அடி ராட்சத பலூன், விளம்பரத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இந்த ராட்ச பலூனை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாக படக்குழு கூறுகிறது.
லண்டனில் பறக்கவிடப்பட்டுள்ள இந்த ராட்சத பலூனை துபாய், சான் பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என உலகம் முழுவதும் பறக்கவிடவும் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஓர் இந்திய படத்தை விளம்பரம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
