கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம்.  “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” இது பேய் படங்களுக்கெல்லாம் அம்மா என சொல்லலாம். இந்தப்படம் மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது .

இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய இயக்குனரும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடியும் கிடைக்காத. ராஜநாகம் பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தார்களாம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும்  தெரிந்து கொண்டு. படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைக்கவுள்ளர்களாம்.

படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். வித்தியாசமான வேடம் அவருக்கு. இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள்.

“தகவலை கசியவிட்ட யுவன்”

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைய இருந்து பின்னர் விலகி கொண்டார்.

இதனையடுத்து தற்போது யுவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அஜித்துடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் என கேட்டதற்கு அடுத்த படத்தில் அஜித் மற்றும் விஷ்ணுவர்தனுடன் இணைவேன் என கூறி அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவிருப்பதை கசியவிட்டுள்ளார்.

யுவனின் இந்த தகவலால், இதனால் தல ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். மேலும் இந்த கூட்டணி அடுத்த படத்தில் நிச்சயம் அமையுமா? என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“மீண்டும் ரசிகர்களை ஏமாற்றினாரா அஜித்!”

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் தல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் இல்லாமல் பிளாக் ஹேரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதற்காக சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிங்கர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆத்விக் பிறந்த நாளுக்காக ஹோட்டல் ஒன்றிற்கு ஷாலினி மற்றும் ஆத்விக் உடன் சென்றுள்ளார், அங்கு ரசிகர்களுடன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் அஜித் பழைய மாதிரி சால்ட் ஸ்டைலில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

"தயாரிப்பாளருடன் மோதும் தல'யின் இயக்குனர்"

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் “அஜித்” தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ஆனால், இந்த படப்பிடிப்புகள் இன்னும் தொடங்காமல் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது இது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் தரப்புக்கும் இயக்குனர் சிவாவுக்கும் இடைவே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் அஜித் சிவாவிற்கு முழு ஆதரவு கொடுத்து வருவதால் தயாரிப்பாளர் தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறதாம்.

“நண்பரான ரஜினியை வைத்தே மோடியை எதிர்த்த ரஞ்சித்”

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே மாஸ் தெறிக்கும். ரஞ்சித்துடன் ரஜினி கூட்டணி வைத்தபிறகு மாஸ் மட்டுமின்றி கிளாஸாகவும் செம்ம ஸ்கோர் செய்கிறார் ரஜினி.

இந்நிலையில் ‘காலா’ டீசர் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற, இதில் பல குறியீடுகள் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். டீசர் வெளியானது முதலே, செம ட்ரென்டிங்கில் இருக்கும் ‘காலா’ டீசர் மூலம் ரஜியை வைத்து மோடியையும், பிஜேபி-யையும் விமர்சித்திருப்பதாகவும், சமூக வலைதளங்களில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி பேசியிருக்கும் வசனங்கள் செம வைரலாகி வருகிறது. ரஜினி இப்படத்தின் புகைப்படத்தில் ‘இராவண காவியம்’ புத்தகத்தை மேஜையில் வைத்திருப்பது தெரிகிறது. இந்தப் புத்தகம் இராமயணத்தை எதிர்க்கும் விதமாகவும், ஆரியத்தை எதிர்த்து திராவிடம் பேசும் விதமாகவும் உருவாக்கப்பட்டது.

1946-ம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தை புலவர் குழந்தை எழுதினார். இந்தப் புத்தகத்திற்கு 1948 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டு பின், 1971-ல் மீண்டும் வெளியிடப்பட்டது. இராமனைப் புகழும் பிஜேபி-க்கு இது எதிர்ப்பைப் பதிவு செய்வதாகவே இருக்கிறது. அதேபோல, மோடியின் சிறப்பு வாசகம் க்ளீன் இந்தியாதான். அதைக் குறிக்கும் ஒரு வசனத்தை டீசரில் வில்லன் நானா படேகர் சொல்ல, அதை ரஜினி எதிர்த்து பேசுகிறார். இதனால், மோடிக்கு எதிராக மறைமுகமாக சில வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்களும் இல்லை, வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை என்பதையும் உணர்த்தும் விதமாக வசனம் இடம்பெறுகிறது. தேசியக்கொடியில் காவி நிறத்திற்கு பதிலாக வேறு கலர், ஒடுக்கப்பட்டோர் பேனர் வாசகம் என டீசரிலேயே குறியீடுகள் இருக்கின்றன.