தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி என்ற பெயரில் ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், மூன்றாவதாக அவரே இயக்கி, அவரே நடித்துள்ள திரைப்படம் 'இரண்டாம் குத்து'. மற்ற இரண்டு படங்களுக்கும் ஏற்கனவே கடும் கண்டனங்கள் எழுந்தன. இரட்டை அர்த்த வசனங்கள், ஒளிவு மறைவில்லாத படுக்கையறை காட்சிகள் என தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பதாக பலரும் கொந்தளித்தனர். 

ஆனால் அதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத இயக்குநர் வக்கிரம், ஆபாசத்தின் உச்சமாக தலைப்பிலேயே இரட்டை அர்த்தத்தை வைத்து “இரண்டாம் குத்து” படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட்டுள்ளார். ஆபாசம் தெறிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த அந்த டீசருக்கு சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற படுமோசமான படங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

 

இதையும் படிங்க: விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நட்சத்திர தம்பதி... தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் என்ற முறையில் பாரதிராஜாவும் தனது கடும் கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு அவரையே நக்கலடிக்கும் விதமாக அவருடைய “டிக்டிக்டிக்” பட போஸ்டரை போட்டு இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பதிலளித்து திரைத்துறையினரை கடுப்பேற்றியுள்ளது. 

 

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?... ஓடிடியில் களைகட்டும் “க/பெ ரணசிங்கம்”...!

இந்நிலையில் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாகவும், ஆபாசம் நிறைந்த படத்தை இயக்கிய இரண்டாம் குத்து இயக்குநரை கைது செய்ய வேண்டுமென பெண் அரசியல் பிரமுகரான ராஜேஸ்வரி பிரியா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுபோன்ற படங்கள் தான் தற்போது நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு காரணம் என குற்றச்சாட்டியுள்ள அவர், தயாரிப்பாளர் சங்கம் இந்த பட விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பொது இடத்தில் சொல்ல முடியாத அளவிற்கு இரட்டை அர்த்தத்தில் இவ்வளவு கேவலமாக தலைப்பு வைத்துள்ளனர், அதை என்னால் சொல்லக்கூட முடியவில்லை... அதை அவர்கள் வீட்டு பெண்களிடம் சொல்ல முடியுமா? என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.